வணக்கம்!
பிரான்சில் வாழும் இலங்கைத் தமிழ் பழைய மாணவர்களுடன் சில பழைய
மாணவர் சங்கங்கள் ஒன்றினைந்து உருவாக்கியது.
'இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் பிரான்ஸ்'
அன்பு உறவுகளே ஒன்றியத்தின் நோக்கம்!
ஆயிரம் ஆயிரம் கனவுகள் சுமந்து சாதனை வெளியில் சிறகு விரிக்க காத்திருக்கும் எம் தாயக சிறார்களின் கல்விக்காக புலம்பெயர் தேசத்தில் பரந்து வாழும் பழையமாணவர்களாகிய நாங்கள் இணைந்து கரம் கொடுப்போம். அவர்களின் கல்விக்கான வளர்சிச்சிக்கு உங்களின் பேருதவியுடன் அத்திவாரம் அமைக்க நேரம் கை கூடியுள்ளதனை புரிந்து கொள்ளுங்கள் உங்கள் சிந்தையில் உங்கள் உறவுகளுக்கு உதவவேண்டும் என்ற என்னம்; இருப்பதனை மறுக்கமுடியாது என்பது உண்மை எனவே பெருநம்பிக்கையுடன் எழுந்து வாரீர் இது எங்கள் கடமை மட்டுமல்ல காலத்தின் கட்டாயமும் கல்வியே ஒரு இனத்தின் மூலதனம் இது ஒவ்வொருவராலும் உணரப்பட்ட உண்மை. எனவே அந்த கல்வியை எமது எதிர்கால சந்ததியினரிடம் சேதாரம் இல்லாமல் சேர்க்கவேண்டிய பொறுப்பு எங்கள் கரங்களில் இருக்கின்றது. எங்களின் உறவொன்று கல்வி கற்க முடியாமல் ஏங்குவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. இன்றே முடிவெடுப்போம் எம் இனத்துக்கு விழி கொடுப்போம். நம்பிக்கை உங்கள் மீது நீங்கள் வைத்து கொள்ளுங்கள் இது உங்களின் உறவுகளுக்கு நீங்கள் செய்யும் உதவி. குறைந்தது ஒரு மாணவனின் கல்விக்குரிய அடிப்படை தேவைகளுக்கு நீங்கள் கைகொடுங்கள் முதல்கட்டமாக 1000 மாணவர்களுக்கு கரம்கொடுக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம் எங்களோடு நீங்கள் உள்ளீர்கள் என்ற உணர்வில். நாம் எதிர்பார்ப்பது ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு மாதமும் தலா ஆயிரம் (1000) வழங்குவது. அவர்கள் கல்வியில் ஒரு உச்ச நிலையடையும்வரை அவர்களுக்கு துணைநிற்பது. எல்லோரும் இணைந்து எம் எதிர்காலம் அமைப்போம்.
நன்றி.
இலங்கைத் தமிழ் பழையமாணவர் ஒன்றியம் - பிரான்ஸ்;