GHG

கல்விக்கு கரம் கொடுப்போம்

06.03.2016 அன்று பிரான்சு இலங்கை தமிழ் பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்வில் பெருமளவில் பிரான்சில் வாழும் தமிழ் இளையோரும் பெற்றோரும் கலந்து கொண்டு இலங்கையில் கல்விகற்கும் தமிழ் மாணவர்களின் நிலைபற்றியும் அவர்களின் கல்விக்காக ஒன்றியம் முன்னெடுக்கும் மாணவர்களை நோக்கிய திட்டங்களின் பொறிமுறைகள் தொடர்பாகவும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கல்விகற்க போதிய வசதிகள் இல்லாத மாணவர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர் அவர்களுக்கு பணம் எவ்வாறு வழங்கப்படுகின்றது இவ்வாறான வேலைத்திட்டங்களை செய்யும் ஒன்றியத்துடன் இளம் சமூதாயத்தினர் இனணந்து கொண்டு வேலை செய்வது தொடர்பாக அவர்களின் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் இங்குள்ள அடுத்த தலைமுறைக்கு இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்வி பிரச்சினை தெளிவுபடுத்தப் பட்டது. அத்தோடு பிரான்சு கல்வி முறை தொடர்பாகவும் பெற்றோர்களுக்கு காணொளி மூலம் விளங்கப்படுத்தப்பட்டது இன் நிகழ்வு ஒரு ஆரோக்கியமான நிகழ்வாக அமைந்தது.

Union Des Anciens Elèves Tamouls de Sri Lanka - France